பழையகுற்றாலம் வெள்ளமும்..சிறுவனின் இறப்பும்..

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து நீர் வரத்து அதிகமாக இருக்கும் என வனத்துறை சார்பில் குற்றாலம் காவல் நிலையத்திற்கு இன்று 1.55 மணி அளவில் வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் குற்றாலம் மெயின் அருவியிலும் ஐந்தருவியில் மட்டுமே நீர்வரத்து அதிகமாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலத்தில் வெள்ளம் ஏற்பட்டது காவல்துறையினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை அதே சமயம் பழைய குற்றாலத்தில் மேல் பகுதியில் உள்ள தடுப்பணை வரை குற்றாலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். அதற்கு மேல் உள்ள பகுதிகள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் உடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளாகும் இதனை கடையம் வனச்சரகம் சார்பில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் ஆனால் கடையம் வனத்துறையினர் அங்கு பணியில் இல்லாததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது குற்றாலம் மற்றும் ஐந்தருவி வனப் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது மழைக்காலங்களில் வனத்துறையினர் மலையின் மேல் பகுதியில் இருந்து தெரிவிக்கப்படும் தகவலை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவிலும் ஐந்தருவிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆனால் பழைய குற்றாலத்தில் இந்த முறை நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை இதன் காரணமாகவே வெள்ளம் வந்த நிலையில் சுற்றுலாப்பயணிகளுக்கு தகவல் தெரியவில்லையென்றும்..ஒரு சிறுவனின் உயிரிழப்பு நடந்தது என்கின்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Tags : பழையகுற்றாலம் வெள்ளமும்..சிறுவனின் இறப்பும்..