மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் குளிக்கத் தடை- ஏ.கே.கமல் கிஷோர்
தென்காசி மாவட்டத்திற்கு மே 17 முதல் 21ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிககனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 1077 அல்லது 04633 290548 என்ற எண்களில் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Tags : மறு உத்தரவு வரும் வரை குற்றால அருவிகளில் குளிக்கத் தடை- ஏ.கே.கமல் கிஷோர்



















