அப்பல்லோ மருந்தகத்தில் ரூ.15 லட்சம் பொருள் தீக்கிரை

by Editor / 10-09-2021 10:56:11am
அப்பல்லோ மருந்தகத்தில் ரூ.15 லட்சம் பொருள் தீக்கிரை

சிந்தாதிரிப்பேட்டை, வேலஸ் சாலையில் அப்பல்லோ மருந்தகம் உள்ளது. நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி, எழும்பூர் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் தீக்கிரையாயின. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories