சிவகாசி பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

by Editor / 10-09-2021 10:46:43am
சிவகாசி பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் எஞ்சியிருப்பதால் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாவட்டத்தில் மொத்தமாக 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவுக்கே தேவையான 90 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு பட்டாசு உற்பத்திக்கு சிவகாசி முக்கியமான இடமாக திகழும் நிலையில் அங்கு அவ்வப்போது வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. சமீப காலமாக அங்கு வெடிவிபத்து சம்பவங்கள் அதிகமாக நிகழ்கிறது. நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வெடி விபத்து சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது வெடிவிபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via