காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது - ரூ.50 லட்சம் சேதம்

by Editor / 29-09-2021 06:05:28pm
காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது - ரூ.50 லட்சம் சேதம்

 

நெல்லை காவல்கிணறு அருகே சூறைக்காற்றால் 50 லட்சம் மதிப்புள்ள காற்றாலை முறிந்து விழுந்ததில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.


நெல்லை மாவட்டம், காவல்கிணறு அருகே உள்ள அம்பலவாணபுரத்தில் வீசிய சூறைக்காற்றில் தனியாா் காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்தது. இதில் காற்றாலையின் இறக்கைகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். சரிந்து விழுந்த காற்றாலை 600 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via

More stories

Logo