குளத்தில் கரம்பை மண்திருட்டு நடந்தால் தாசில்தார் ,துணைதாசில்தார் மீது நடவடிக்கை -

by Editor / 28-09-2022 11:43:54pm
குளத்தில் கரம்பை மண்திருட்டு  நடந்தால் தாசில்தார் ,துணைதாசில்தார் மீது நடவடிக்கை -

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  ஆய்க்குடி பேரூராட்சியில் பொதுப்பணித்துறைக்கு பாத்தியப்பட்ட குளத்தில் 8 அடி ஆழத்தில் மண் எடுக்கிறார்கள் என்று  கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவர் மேற்கண்ட குளத்தை நேரில் *28/09/2022 மாலை 4 மணி அளவில் சென்று ஆய்வு செய்தார்.மேலும் அந்த குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட   8 அடிக்கு  அதிகமான ஆழத்தில் மண் தோண்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது . ஏற்கனவே 27/09/22 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் மண் எடுப்பதை நிறுத்தி அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ளார்.  இருந்தபோதிலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டு இந்த கொள்ளை நடந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

குளத்தில் கரம்பை மண்திருட்டு  நடந்தால் தாசில்தார் ,துணைதாசில்தார் மீது நடவடிக்கை -
 
Tags :

Share via