by Editor /
03-07-2023
11:08:47pm
தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. போக்குவரத்தை சரிசெய்தல் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
Tags :
Share via