அமெரிக்காவில் ராகுல் காந்தி கலகல பேச்சு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், “எனக்குதான் எல்லாம் தெரியும் என்பதுபோல நாம் இருக்கக் கூடாது என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தியாவில் சிலர் அப்படி உள்ளனர். பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர்தான்! கடவுள் வந்து பிரதமர் பக்கத்தில் உட்கார்ந்தால், 'பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது' என பிரதமர் கடவுளிடம் விளக்கத் தொடங்கிவிடுவார். 'நாம் என்ன உருவாக்கி வைத்துளோம்' என கடவுளே யோசிப்பார்” என தெரிவித்துள்ளார்.
Tags :