சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 3இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம்.

by Editor / 26-03-2023 11:17:25pm
சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 3இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகம்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பயப்பட தேவையில்லை எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் 17பேர் மட்டுமே சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தினமும் 3,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 3இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் செல்வ விநாயகம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via