ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்!!
சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 40வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீல்கேனி, தொடர்ந்து திறமை மிக்க ஆட்களுக்கு இன்ஃபோசிஸ் நிருவனம் வேலை அளித்து வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் இந்தியாவில் மட்டும் 19,230 பட்டதாரிகளை பணியமர்த்தி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பல துறைகள் வீழ்ச்சி கண்ட நிலையில் தொழில் நுட்ப துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்ய இன்ஃபோசிஸ் திறன்மிக்க வேலையாட்களை பணியமர்த்தி வருகிறது. அதோடு இந்தியாவுக்கு வெளியில், குறிப்பாக அமெரிக்காவில் 2022ம் ஆண்டில் 25000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே நாஸ்காம் வெளியிட்ட தகவலின் படி, டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎஸ், காக்னிசென்ட் ஆகிய ஐடி நிறுவனங்கள் நம் நாட்டில் சுமார் 96000 வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் மற்ற நிருவனங்கள் டிஜிட்டல் சேவைகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
நாஸ்காம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொரோனாவுக்கு பிறகு பிற நிறுவனங்கள் உடனான ஐடி நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 30% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
--
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை
B.Tech./ B.E படித்தவர்களுக்கு. மாதம் ரூ.23700 சம்பளத்தில். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் SBI வேலை.!!!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Special Cadre Officer (Engineer)
காலி பணியிடங்கள் - 16
விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.06.2021
கல்வித் தகுதி: B.Tech./ B.E.
வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.23700 முதல் ரூ.42020 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://recruitment.bank.sbi/crpd-sco-fire-2020-21-32/apply
Tags :