தகுதியான வாக்காளர்கள் விண்ணப்பிக்க பிப்ரவரி 9- தேதி வரை அவகாசம்
2026 ஆம் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு. கொல்கத்தா கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது ,தமிழக வாக்காளர் பட்டியலின் பெயர் சேர்க்கவும் நீக்கவும் வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்காக விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படி பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை பொதுமக்கள் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஈடுபட்ட தகுதியான வாக்காளர்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது தகுதியுள்ள நபர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவோ தங்களது விண்ணப்பங்களை சரி பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாச நீட்டிப்பின் காரணமாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
Tags :


















