நூறு வயதான மூதாட்டியை வெறி நாய் கடித்து குதறியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்வராயன் நேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நூறு வயதான மூதாட்டி பாப்பாத்தி.கணவர் இறந்த நிலையில் பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு யாரும் இல்லாத போது வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் போது பழக்கம் இல்லாத வெளியில் இருந்து வந்த வெறி நாய் ஒன்று காப்பாத்தியின் கை மற்றும் முகத்தில் கடித்து குதறியது.
அருகில் உள்ளவர்கள் நாயை விரட்டி விட்டு பாட்டியை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தற்போது வெறி நாய்களை கட்டுப்படுத்த அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே நாய்கள் கடி பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
Tags :