ரோபோவை அடித்து நொறுக்கிய பெண்

மருத்துவமனையில் வரவேற்பாளராக உள்ள ரோபோவை உருட்டுக்கட்டையால் பெண் நோயாளி தாக்கிய வீடியோ வைரலாகிவருகிறது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள Zhuzhou நகரில் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில், நோயாளிகளுக்கு உதவுவதற்காக ரோபோ ஒன்று வரவேற்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதியன்று மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த பெண் ஒருவர் திடீரென ஆத்திரத்தில் அந்த ரோபோவை உருட்டுக்கட்டையால் தாக்கினார். அப்போது ரோபோவின் பாகங்கள் உடைந்து சிதறின. அந்தப் பெண் மன நலம் பாதித்தவர் எனக் கூறப்படுகிறது. இதை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்து பதிவிட்ட நிலையில் அந்தக் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Tags :