மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி-முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்
இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார் .இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி வளர வேண்டுமெனில் அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதி அரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழுவின் முதற்கட்ட அறிக்கையை பெற்ற நிலையில் அதன் அடிப்படையில் மாநிலங்களின் உரிமைகளை மீட்டு எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டியதோடு மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி பகிர்வு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி மாநிலங்கள் தற்சார்பு பெற்ற சுயாட்சி அதிகாரத்தோடு செயல்பட வேண்டும் என்றும் ஜிஎஸ்டி, இந்தி திணிப்பு மற்றும் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுஎதிர்கொள்ளும் முட்டுக்கட்டைகளுக்கு ஒரே தீர்வு மாநில சுயாட்சி தான் என தெரிவித்தார்.
Tags :



















