தொடர்ந்து கற்றுக் கொள்பவர்களே இறுதிவரை வெற்றி பெறுவார்கள்-இன்று டெல்லி ஐ.ஐ.டி 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 08-08-2026 09:16:28pm
தொடர்ந்து கற்றுக் கொள்பவர்களே இறுதிவரை வெற்றி பெறுவார்கள்-இன்று டெல்லி ஐ.ஐ.டி 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி

இன்று டெல்லி ஐஐடி 57வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 587 பிஹெச்டி ஆய்வாளர்களுக்கும் இளநிலை,முது நிலை உள்பட மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் பேசிய பிரதமர் ,உலகமும் தொழில் நுட்பமும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இன்னும் 20- 30 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது அதனால் எத்தகைய மாற்றங்கள் வந்தாலும் தொடர்ந்து கற்றுக் கொள்பவர்களே இறுதிவரை வெற்றி பெறுவார்கள் என்றும் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் தேடலையும் புதிய விஷயங்களையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை கைவிட்டு விடாமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் எந்த ஒரு பெரிய சவாலையும் கண்டு பயம் கொள்ள தேவையில்லை. சவால்களுக்கு புதிய தேர்வுகளை தேடும் துணிச்சல் இருந்தால் எந்த பெரிய சவாலையும் எதிர்கொண்டு அதை வாய்ப்புகளாக மாற்ற முடியும் என்றும் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் உடனே ஏற்றுக் கொள்ளாமல் அது குறித்தான கேள்வியை கேட்க வேண்டும் என்றும் வெறும் கேள்வியோடு நின்று விடாமல் அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டறியும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அத்துடன் சமூக ஊடக நண்பர்கள் சம்பள பேக்கேஜ் வேலை அல்லது ஸ்டார்ட் அப் சாதனைகளுடன் உங்களை நீங்களே ஒப்பிட்டு பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாக கூடாது என்றும் வாழ்க்கை என்பது ஒரு போட்டி அல்ல என்றும் உங்கள் உண்மையான போட்டி மற்றவர்களுடன் இல்லை உங்களுடன் தான் என்றும் நேற்றிய உங்களைவிட இன்றைய நீங்கள் சிறந்தவராக மாற உழைக்க வேண்டும் என்றும் பதக்கங்கள் மற்றும் விருதுகள் பெரும் சாதனையாளர்களில் நமது மகள்களின் பங்களிப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலச் சிற்பிகள் என்றும் அடுத்த 30 அல்லது 35 ஆண்டுகால முடிவுகள் இந்தியாவின் வளர்ந்த பாரத கனவை நினைவாக்கப் போவதும் நீங்கள்தான் என்றும் பிரதமர் தம் ஆலோசனைகளையும் விருப்பத்தையும் தெரிவித்தார்.

தொடர்ந்து கற்றுக் கொள்பவர்களே இறுதிவரை வெற்றி பெறுவார்கள்-இன்று டெல்லி ஐ.ஐ.டி 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
 

Tags :

Share via

More stories

Logo