15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 11-10-2023 07:51:44am
15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

 

Tags : இடி மின்னலுடன்

Share via