அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 58 சதவீத அகவிலைப் படியிலிருந்து 2% உயர்த்தப்பட்டு 60 சதவீகிதமாக உயர்த்தி உத்தரவு. இந்த அகவிலைப்படி உயர்வு 01..01..2026 முதல் கணக்கிடப்பட்டு முன் தேதியிட்டு வழங்கப்படும் இதனால் , சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பலன் பெறுவர். இந்த 2 சதவீகித அகவிலைப்படி உயர்வினால், தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய்1,230 கோடி கூடுதல் செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags :



















