தூக்கில் தொங்கிய இளம் காதலர்கள்.. கொலையா?

உத்தரபிரதேசம் சான்ட் கபீர் நகர் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் 18 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் அதே கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று (செப் 19) மாலை தூக்கில் நிலையில் காணப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சான்ட் கபீர் நகர் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மொபைல் போன்களை கைப்பற்றியுள்ளனர்.அதேநேரம் இது கொலை என இருவரது குடும்பத்தாரும் தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :