திங்கட்கிழமை, காலை 10:30 மணிதி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் தலைமையில்

by Admin / 13-03-2026 10:24:49pm
திங்கட்கிழமை, காலை 10:30 மணிதி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் தலைமையில்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் 16.03.2026, திங்கட்கிழமை, காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட கழக செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்பு உள்ளதால் ,தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சியின் தயார் நிலை குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டம், மார்ச்- 15 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via

More stories