இன்று தமிழக வெற்றி கழகபொதுச்செயலாளர் என் .ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளருடன் அவசர ஆலோசனை

by Admin / 13-03-2026 09:53:19pm
இன்று தமிழக வெற்றி கழகபொதுச்செயலாளர் என் .ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளருடன் அவசர ஆலோசனை

தமிழக வெற்றி கழகம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து  ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தமிழக வெற்றி கழகபொதுச்செயலாளர் என் .ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளருடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 132 மாவட்ட செயலாளர்கள் 120 பேர் இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிட வேண்டுமா அல்லது கூட்டணியில் இணைய வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மாவட்ட செயலாளர்களின் பெரும்பான்மையூர் என்டிஏ கூட்டணி சேர ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது ..அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் இணைந்தால் தமிழக வெற்றி கழகத்திற்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. கூட்டணி குறித்த இறுதி முடிவு கட்சித் தலைவர் விஜய் எடுப்பார் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விஜய் விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories