மதுரை - புனலூர் ரயில் நாளை (திங்கள் அன்று) வழக்கம்போல் இயங்கும்.

by Editor / 25-09-2022 03:52:47pm
மதுரை - புனலூர் ரயில் நாளை (திங்கள் அன்று) வழக்கம்போல் இயங்கும்.

திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள இரணியல் அருகே இரட்டை ரயில் பாதை பணிக்காக சில பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடைபெறுவதாக இருந்தது. அதற்காக மதுரையிலிருந்து செப்டம்பர் 26 அன்று புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் புனலூரில் இருந்து செப்டம்பர் 27 அன்று புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெறவில்லை‌. எனவே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மதுரை - புனலூர் - மதுரை விரைவு ரயில்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல இயங்கும்.

 

Tags :

Share via