பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்கள்

இலங்கை பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றிருந்தார். இப்பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இலங்கை போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை போன்று 90 பெண்கள் சுற்றுலா விசாவில் அழைத்து செல்லப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் சில பெண்கள் பாலியல் ரீதியாக ஏலத்திற்கு விடப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். பெண்கள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகின்றனர்.
Tags :