மனசாட்சி தேவை இல்லாதவர்களை தூக்கி எறிய மக்கள் தயங்க கூடாது -ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எம் ஜி ஆர்-ன் 106 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:தமிழகத்தின் ஆளுநர் சரியான ஆளுநராக உள்ளார்.அதிமுகவினர் வேலையை தற்போது தமிழக ஆளுநர் செய்து வருகிறார். பீகாரில் உளவுத்துறை அதிகாரியாக வேலை பார்த்தவர் திமுக கொண்டுவரும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில்லை எனவே எங்களது பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து விட்டோம் திமுகவுக்கு முடிவு கட்டும் வேலையை ஆளுநர் செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், எழுதாத பேனாவுக்கு 80 கோடி ரூபாயா, பொங்கல் சமயத்தில் கரும்பு கொடுக்க இயலாத நிலையில் இது தேவையில்லாதது கடந்த ஆட்சியில் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் அனைத்தும் கொடுத்து ரூபாய் 2500 வழங்கியபோது ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆட்சியில் கரும்பு கூட குறைக்கவில்லை அதிமுக போராட்டம் அறிவித்த பின்னரே கரும்பும் வழங்கப்பட்டதாக கூறினார்.
தாலிக்கு ஒரு சவரன் தங்கம் ரூபாய் 50,000 ரொக்கமாக கொடுத்தது அதிமுக அரசு தற்போது இந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. விரைவில் தேர்தல் வரவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தலும் வரக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பொது சேவைக்கு வந்திருக்கும் நபர்களுக்கு சிறிது மனசாட்சி தேவை இல்லாதவர்களை தூக்கி எறிய மக்கள் தயங்க கூடாது எனவும் அவர் பேசினார்.
Tags :



















