ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி?

by Admin / 07-07-2021 05:01:51pm
ஆட்டுக்கால் குழம்பு  செய்வது எப்படி?

கால் குழம்பு

தேவை

      வாட்டி சுத்தம் செய்த ஒரு ஆட்டின் கால்கள்

      தேங்காய் – 2 சில்

 

வெங்காயம் – 10

       வற்றல் – 8

       சீரகம் – 2 தேக்கரண்டி

       மஞ்சள் தூள், உப்பு

செய்முறை

        துண்டு செய்த கால்களை, முதல் நாள் இரவில் நறுக்கிய வெங்காயம் உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். காலையில் வற்றல் சீரகம், தேங்காய் அரைத்து கலந்து மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைக்கவும். இது இட்லிக்கு நன்றாக இருக்கும். பிரியப்பட்டால் இத்துடன் வேக வைத்த மொச்சைப் பயிறு கலந்தும் உபயோகிக்கலாம். கால் வேக அதிக நேரம் ஆகும். கால் குழம்பை தாளிக்க தேவை இல்லை பிரியப்பட்டால் தாளித்தும் உபயோகிக்கலாம்.

 

Tags :

Share via