ஆம்னி பேருந்தில் சடலமாக கிடந்த இளம்பெண்

by Staff / 15-05-2024 05:35:23pm
ஆம்னி பேருந்தில் சடலமாக கிடந்த இளம்பெண்

சென்னையில் பணியாற்றிவரும் கோவையை சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம்பெண் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அங்கிருந்து நேற்று (மே 14) இரவு தனியார் பேருந்து மூலம் சொந்த ஊர் திரும்பியுள்ளார். காலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் வந்த பின்பும் அந்த பெண் இறங்காமல் அசைவின்றி படுத்திருந்துள்ளார். பின்னர், பேருந்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில் அப்பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த காட்டூர் காவல்நிலைய போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via