ஆடி கிருத்திகை  பக்தர்கள் கடலில் புனித நீராடி  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் .

by Editor / 29-07-2024 09:54:42am
ஆடி கிருத்திகை  பக்தர்கள் கடலில் புனித நீராடி  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் .

தமிழ் மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.ஆனால் ஆடி,கார்த்திகை, தை, ஆகிய மூன்று மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபடுவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாட்களில் முருகப்பெருமானை வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகமாக கமாக கருதப்படுகிறது. அந்த வகையில்ஆடி மாத கிருத்திகை இன்று மதியம்2,40மணிக்குத்தொடங்கி நாளை மதியம் 1,40மணி வரை உள்ளது..இந்த நிலையில்  தமிழகத்தில்  இருக்கக்கூடிய அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை நாளை கொண்டாட  படுகிறது.. திருச்செந்தூர் கோவிலில் காலையில் நடக்கக்கூடிய உச்சிகால பூஜையில் வரக்கூடிய நட்சத்திரத்தை கொண்டுதான் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் நாளை ஆடி கிருத்திகைக கொண்டாடப்படும் நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 
 இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via