பழங்கால கோயில்களில் மேற்கொள்ளப்படும்புனரமைப்பு பணிகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.

by Admin / 31-01-2026 11:28:22am
பழங்கால கோயில்களில் மேற்கொள்ளப்படும்புனரமைப்பு பணிகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்கால கோயில்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாநில பாரம்பரிய ஆணையத்தை முறையாக அமைப்பதில் அரசு காட்டி வரும் தாமதத்திற்காக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததோடு அந்த ஆணையம் முழுமையாக செயல்பட்டு தலைவரை நியமிக்கும் வரை பழங்கால கோயில்களில் எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.. சுரேஷ் குமார் , எஸ். சௌந்தர் ஆகியோர் உத்தரவிட்டனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க முன்னணி செய்தி இதழ்களில் விளம்பரம் செய்யுமாறு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மார்ச் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via