காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு.

by Staff / 17-07-2025 09:27:38am
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி புதூரில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வருகை தந்தார்.

இன்று அதிகாலை விருதுநகரில் இருந்து அழகியநல்லூர், மாந்தோப்பு வழியாக நடை பயிற்சி மேற்கொண்டார்.அப்போது காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மருத்துவர்களிடம் குறைகளையும், அங்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும்  காரியாபட்டி மருத்துவமனையில் சுமார் 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மருத்துவமனை கட்டிடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது காரியாபட்டி அரசு மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் உள்ள நிலையில் பிரசவத்திற்காக மகப்பேறு மருத்துவர்கள் வேறு மருத்துவமனையில் இருந்து மாற்றுப் பணியில் வாரம் ஒரு முறைதான் வருகின்றனர். ஆகையால் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உடனே காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாதம் 5 முதல் 10 பிரசவம் நடைபெறுவதால் மருத்துவர்கள் கோரிக்கையை ஏற்று சென்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலகத்திற்கு உடனடியாக தொடர்பு கொண்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர் உடனடியாக நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

Tags : Minister Subramanian makes surprise inspection at Kariyapatti Government Hospital.

Share via