மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் காயம்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விபத்தில் பெருத்த காயம் அடைந்துள்ளார் .இது குறித்துதிரிமுணால்காங்கிரஸ் எக்ஸ் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமான செய்தி பதியப்பட்டுள்ளது.69 ஆவது வயதாகும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ள எஸ் எஸ் கே எம் மருத்துவமனை தரப்பிலிருந்து அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு நெற்றிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அத்துடன் மம்தா பானர்ஜி புகைப்படத்தையும் மருத்துவமனை தரப்பிலிருந்துவெளியிடப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தம் வீடு அமைந்துள்ள காளிகட் வீட்டிற்கு ஒரு நிகழ்ச்சியை முடித்து திரும்பிய பொழுது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பதிவில் மம்தாஜியை விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வர பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மம்தா ஜி பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags :