பேடிஎம்  வங்கி சேவை இன்று  மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

by Admin / 15-03-2024 12:56:31am
பேடிஎம்  வங்கி சேவை இன்று  மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

பேடிஎம்  வங்கி சேவை இன்று  மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் பேடிஎம் வழியாக ஃபாஸ்ட்ராக், பங்குச்சந்தை போன்றவற்றில் வர்த்தக கணக்கு வைத்திருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மும்பை பங்குச்சந்தையும் அறிவுறுத்தியுள்ளது..இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான கணக்கை வைத்திருக்கும் பேடிஎம் நிறுவனம் இந்திய ரிசர்வ் பேங்க் விதித்த விதிகளை மீறியதனால் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து பேடிஎம்  சேவைக்கும் அது தடை விதித்தது. கடந்த மாதம் பிப்ரவரி 29 இல் இருந்து தடையானது தொடரும் என்ற நிலையில், அதனுடைய கால கெடுவை மார்ச் 15 ஆம் தேதி வரை நீடித்தது. அத்துடன் பேடிஎம், கியூ ஆர் கோட் ,பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் ,பேடிஎம் வயலட் தொடர்பாகவும் ரிசர்வ் வங்கி விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதன் மூலம் பேடிஎம் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை பயன்படுத்தலாம் என்றும் அத்துடன் திரும்பப் பெறலாம் . வேறு வங்கி கணக்கிற்கு மாற்றலாம் என்றும் டெபிட் கார்டை பயன்படுத்துவதற்கு தடை இல்லை என்றும் மார்ச் 15ஆம் தேதி இருக்கு பிறகு பேடிஎம் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது என்றும் அத்துடன் வட்டி கேஸ் பேக் ரீபண்டுகள் தவிர மற்ற கிரெடிட் மற்றும் டெபாசிட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது. சம்பளம் உள்ளிட்ட எந்த கிரேட்டையும் பெற முடியாது. வாடிக்கையாளர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்பே இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. பேடிஎம் இல் இருக்கக்கூடிய பணத்தை யுபிஐ மூலம் மார்ச் 15ஆம் தேதி வரையில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது .அதன் பின்னர் மற்ற வங்கிகள் மூலமாக பயன்படுத்தலாம் என்றும் இஎம்ஐ செலுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்கள் வேறு வங்கிகளுக்கு அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பேடிஎம் கணக்கிலிருந்து இருப்பு தொகை வழியாக மார்ச் 15க்கு பிறகு பாஸ்டைக்கில் பணத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருந்தது .பேடிஎம் பேமெண்ட் பேங்க் வங்கி கணக்கு கே ஆர் கோட் சவுண்ட் பாக்ஸ் போன்றவை மூலம் மார்ச் 15ஆம் தேதி வரை பணத்தை பெறுவதற்கு முடியும் என்றும் அதன் பிறகு வேறு வங்கிகளுடன் கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே பணத்தை பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம்  வங்கி சேவை இன்று  மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
 

Tags :

Share via