2026 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இயக்குநர் ரியான் கூக்லரின் "சின்னர்ஸ்"திரைப்படம்
2026 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இயக்குநர் ரியான் கூக்லரின் "சின்னர்ஸ்"திரைப்படம் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. 98-வது அகாடமி விருதுகளில் "சின்னர்ஸ்" திரைப்படம் மொத்தம் 16 பிரிவுகளில் . இதன் மூலம், இதற்கு முன் 14 பரிந்துரைகளுடன் சாதனையாக இருந்த 'டைட்டானிக்', 'லா லா லேண்ட்' மற்றும் 'ஆல் அபௌட் ஈவ்' ஆகிய படங்களின் சாதனையை இது முறியடித்துள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (ரியான் கூக்லர்), சிறந்த நடிகர் (மைக்கேல் பி. ஜோர்டான்), மற்றும் சிறந்த அசல் திரைக்கதை உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் இந்தப் படம் இடம்பிடித்துள்ளது.இது 1930-களில் நடக்கும் ஒரு 'சூப்பர்நேச்சுரல் த்ரில்லர்'அல்லது 'வேம்பயர்' வகை திரைப்படமாகும். இதில் மைக்கேல் பி. ஜோர்டான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 98-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 15, 2026 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் அதீத பரிந்துரைகள் ரியான் கூக்லர் மற்றும் மைக்கேல் பி. ஜோர்டான் கூட்டணியின் மிகச்சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
Tags :


















