ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது மத்திய தணிக்கை வாரியம்.
தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்திற்கு பல்வேறு திருத்தங்களுக்கு பிறகு மத்திய தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. பொங்கலுக்கு வெளிவர வேண்டிய சென்சார் சிக்கல்களால் படம் குறித்த நேரத்தில் வெளிவராமல் தற்பொழுது பல்வேறு காட்சிகள் வெட்டப்பட்டும் வசனங்கள் ஒலி குறைப்பு செய்யப்பட்ட பின்னர் தணிக்கை வாரியம் இந்த சான்றிதழை வழங்கி உள்ளது. இதனால் நீண்ட இழுபறிநிலை காரணமாக எப்பொழுது படம் வரும் என்கிற நிலை மாறி இந்த மாதத்தில் வெளிவருவதற்கான வேலைகளை படக்குழுவினர் செய்துள்ளனர். படம் சென்சார் செய்யப்படுவதற்கு முன்பாகவே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு இதுவரை ஒன்றரை கோடிக்கு மேல் பார்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தம் அரசியல் பிரவேசத்திற்கு தேர்தல் தேர்தல் நேரத்தில் கை கொடுக்கும் என்றிருந்த நிலையில், விஜய் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து முதலமைச்சராக இருக்கின்ற தருணத்தில் படம் வெளிவருவது மூலம் திரையரங்கில் அதிகம் பார்க்கப்படும் திரைப்படமாக இருக்கும் என்கிற கருத்து நிலவுகிறது.
Tags :


















