திருப்பூர் அருகே விபத்து  -3 பேர் சாவு 

by Editor / 24-07-2021 07:31:41pm
திருப்பூர் அருகே விபத்து  -3 பேர் சாவு 


சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி குழந்தை நகர் பகுதியை சார்ந்தவர் கோபிக்கண்ணன் (வயது 38). ஓட்டுநராக பணியாற்றி வரும் கோபிக்கண்ணன்,  சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார்.


இவரது வாகனம் திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் கருக்கங்காட்டுப்புதூர் பிரிவு அருகே சென்ற சமயத்தில், தேடியெரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியுள்ளது. இந்த விபத்தில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோபிகண்ணகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். 


விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே கிடந்த நிலையில், பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த காளிபாளையம் பகுதியை சார்ந்த தமிழ்செல்வன் (வயது 22) மற்றும் பூமிநாதன் (வயது 20) ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளனர்.


சாலையின் நடுவே வாகனம் விபத்திற்குள்ளாகி கிடந்ததை காணாமல் இருவரும் வந்த நிலையில், வாகனம் மீது மோதிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த பெருமாநல்லூர் காவல் துறையினர், 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo