அருந்துகிடந்த மின்கம்பி  மின்சாரம் தாக்கி 7 எருமை மாடுகள் பரிதாப பலி.

by Staff / 30-10-2025 11:34:33pm
அருந்துகிடந்த மின்கம்பி  மின்சாரம் தாக்கி 7 எருமை மாடுகள் பரிதாப பலி.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை யாதவர் தெருவை சேர்ந்த ராமையா மகன் மாரியப்பன் மற்றும் நாராயணன் மகன் பெருமாள் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான  ஏழு எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற நிலையில் அந்த மாடுகள்  சாம்பவர்வடகரை அனுமதி நதி ஆற்று படுகை பகுதியில் உள்ள பொட்டகலம்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் அங்கு  மின் மாற்றி கம்பத்தில் இருந்து மின் கம்பத்திற்கு செல்லும்  பகுதியில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த நிலையில் அனைத்து மாடுகளும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கால் நடை மருத்துவர்,வருவாய்த்துறையினர்,காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தி சம்பவ இடத்தில் மருத்துவ பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.இந்த சமத்துவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.
 

 

Tags : அருந்துகிடந்த மின்கம்பி  மின்சாரம் தாக்கி 7 எருமை மாடுகள் பரிதாப பலி.

Share via