பணம், பொருட்களை துச்சமென மதித்த மக்கள் - சீமான் பெருமிதம்

by Staff / 04-03-2023 02:06:55pm
பணம், பொருட்களை துச்சமென மதித்த மக்கள் - சீமான் பெருமிதம்

திராவிட கட்சிகள் கொடுத்த பணம், பொருட்களை துச்சமென மதித்து, மாற்றத்தை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று கூறி பெருத்த நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், 2வது வாக்குப்பெட்டியில் 22வது வரிசையிலிருந்த விவசாயி சின்னத்தைத் தேடித்தேடி வாக்களித்த 10,827 அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி. தேர்தல் களத்தில் தொய்வின்றி பயணம் தொடர உங்களின் ஒவ்வொரு வாக்கும் ஆக்கமும் ஊக்கமும் தருகிறது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo