அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்..

by Staff / 07-12-2023 05:23:25pm
அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்..

சென்னை வண்ணாரப்பேட்டை, 'மிக்ஜாம்' புயலால், வடசென்னை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் சேகர்பாபு வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில், நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, வண்ணாரப்பேட்டை, தங்கசாலை, பென்சில் லைன், லாலா குண்டா, ராம்தாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் அவரை சூழ்ந்தனர்.

அப்போது மின் தடை, வீடுகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்குவது, உணவு, பால், குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி, அவரை முற்றுகையிட்டனர்.ஒவ்வொருவராக குறைகளை கூறும்படி அவர் கேட்க, மீண்டும் எல்லாரும் ஒரே நேரத்தில் குறைகளைக் கூறியதால், அந்த இடமே பரபரப்பானது. பின், விரைவில் குறைகளை தீர்ப்பதாக கூறிவிட்டு, அமைச்சர் சேகர்பாபு கிளம்பினார்.

 

Tags :

Share via

More stories