தமிழகத்திற்கு மத்திய அரசு துணை நிற்கும்: அண்ணாமலை

by Staff / 07-12-2023 05:21:47pm
தமிழகத்திற்கு மத்திய அரசு துணை நிற்கும்: அண்ணாமலை

தமிழகத்திற்கு, மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது என தமிழக பா. ஜ. , தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வைிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: தமிழக மக்களுக்கு என்னவெல்லாம் மத்திய அரசு உதவிகளை செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். நேற்று 5060 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். 24 மணி நேரத்திற்குள், ராஜ்நாத் சிங், எல். முருகனை தனது பிரதிநிதிகளாக தமிழகத்திற்கு பிரதமர் மோடி அனுப்பி வைத்துள்ளார். தமிழக மக்களுடன் பிரதமர் இருக்கிறார் என்பதற்கு இதனை விட சான்று தேவையில்லை. அம்ரூத் திட்டத்தின் கீழ், 4397 கோடி ரூபாய் சென்னைக்கு 7 ஆண்டுகளில் மோடி அளித்துள்ளார். தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட எங்கு மழை உள்ளிட்ட காரணங்களினால் பிரச்னை வந்தாலும் மத்திய அரசு துணை நிற்கிறது. வேகமாக செயல்படுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

 

Tags :

Share via

More stories