தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியினுடைய தலைமை ஆசிரியை தமிழ்வாணி என்பவர் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சின்ன சின்ன காரணங்களுக்காக மெமோ வழங்கப்பட்டதாகவும், தங்களை காரணமின்றி வகுப்புகளை நடத்த விடாமல் இடையூறு செய்வதாகவும். மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்துவதாகவும் கூறி ஆசிரிய, ஆசிரியைகள் புகார்.வாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறி தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை சுமார் 75 க்கும் மேற்பட்ட ஆசிரிய,ஆசிரியைகள் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார், மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதனைத்தொடர்ந்து ஆசிரிய.ஆசிரியர்கள் கலைந்துசென்றனர்.
Tags : தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை.