விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

by Editor / 10-07-2024 09:47:00am
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று (ஜூலை 10) வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.காலையிலேயே வெயிலையும் பொருட்பாடுத்தாமல் மக்கள் வாக்களிக்க திரண்டுவந்தவண்ணம் உள்ளனர்.தொடர்ந்து வருகிற ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.விக்கிரவாண்டி அன்னியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

 

Tags : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

Share via