தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

by Editor / 10-07-2024 12:33:24am
தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்குப்பின்னர் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று சென்னை காவல் ஆணையர் அதிரடியாக மாற்றபட்டார். இந்த நிலையில், இன்று 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியல்..

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்க பணியகம் சிஐடி ஏடிஜிபியாக பணியிட மாற்றம்.
தாம்பரம் காவல் ஆணையராக ஐபிஸ் அதிகாரி அபின் தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி கண்ணன் நியமனம்.
சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமனம்.
வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.
தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்.
சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமனம்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமனம்.
சேலம் காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமனம்.
சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்.
ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்.
சென்னையில் காவல்துறை தலைவர் அலுவலக ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.
சிபிசிஐடி ஐஜியாக உள்ள டிஎஸ் அன்புவிடம் கூடுதல் பொறுப்பாக சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி பொறுப்பும் ஒப்படைப்பு.
கடலோர காவல் படை ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமனம்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம்.
 மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாக எச்.எம்.ஜெயராம் நியமனம்.
 காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக வினீத் தேவ் வான்கடே நியமனம்.
காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமனம்.

 

Tags : தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Share via