ஆலங்குளம் அருகே குளத்தில்  மூழ்கி 3 குழந்தைகள் பலி

by Editor / 01-07-2021 05:40:35pm
ஆலங்குளம் அருகே குளத்தில்  மூழ்கி 3 குழந்தைகள் பலி



ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்தன.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தை அடுத்த சிறிய கிராமம் சண்முகாபுரம். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வரும்வந்த இந்த கிராமத்தில் சில பீடித் தொழிலாளர்களும் உண்டு. அந்த கிராமத்தில் உள்ள தர்மராஜ் மகன் புவன் (5) தர்மராஜின் சகோதரர் கண்ணன் மகன் இஷாந்த்(5) மற்றும் அவரது உறவினர் பூபாலன் மகள் சண்முகப்பிரியா(5) ஆகிய மூன்று குழந்தைகளும் மதிய நேரத்தில் காணவில்லை என்று அவர்களின் பெற்றோர்கள் தேடியுள்ளனர்.
அக்கம்பக்கம் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் சந்தேகத்தின் பேரில் ஊருக்கு வடபுறம் உள்ள பட்டர் குளம் என்ற குளத்தில் தேடிய போது குழந்தைகளின் ஆடைகள் தெரிந்துள்ளது. அதன் பேரில் உள்ளே இறங்கி பார்த்த போது மூன்று குழந்தைகளையும் மீட்ட உறவினர்கள் குழந்தைகளை தங்கள் பைக்குகளில் வைத்து ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர். விளையாடச் சென்ற குழந்தைகள் தண்ணீரைக் கண்டதும் பள்ளம் இருப்பது தெரியாமல் ஒருவர் பின் ஒருவராக இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via

More stories