சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கைது

by Admin / 04-08-2026 11:20:55am
சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கைது

தஞ்சாவூரில் திமுக சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆபாசமாகவும் அவதூறாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து பேசியதாக தமிழக வெற்றிக்கழக மகளிர் அணியினர், நிர்வாகிகள் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 9 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து தஞ்சை போலீசார் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைத்து.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர்.. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுக தொண்டர்கள் நீலாங்கரை இல்லத்தின் முன்பு குவிந்தனர் காவல்துறையின் அமைத்த தடுப்பரன்களை அகற்றம் என்றால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது. நாளை தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் இந்தப் பழிவாங்கும் கைது நடவடிக்கை எதிராக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo