மத்திய அரசு உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.12,400 (24 மாதங்களுக்கு) உதவித்தொகை வழங்கும் வகையில் முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏஐசிடிஇ முதுகலை பொறியியல், எம்.டெக்., எம்.ஆர்க்., முதுகலை வடிவமைப்பு (M.E/ M.Tech./ M.Arch./ M.Des.) ஆகிய படிப்புகளில் சேரும் மாணவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் https://pgscholarship.aicte-india.org- என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் தகுதி சரிபார்க்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :