மரணத்திற்கு பிறகும் மனிதனை விடாது சாதி" - உயர்நீதிமன்றம்
தமிழகத்தின் பல படுதிகளில் சாதி ரீதியான பாகுபாடு பெருமளவில் பார்க்கப்படுகிறது.குறிப்பாக மயானத்திற்கு செல்லும் வழியிலும்,மயானத்திலும் சாதி பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையோடு கருத்து தெரிவித்துள்ளார்.மேலும்,மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து, சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயான நிலத்திற்கு செல்லும் வழியில் ஒரு சமூகத்தினர் உடல்களை மட்டுமே எரிப்பதாக கோவையை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த நிலையில்,மயானத்தில் பிற சமூகத்தினர் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறி உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Tags :