தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை
தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்திய நாடு என்ற சாதனையை இந்தியா படைத்து உள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.இந்நிலையில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், டாக்டர் ரெட்டி லேபரட்டரிஸ், ஜைடஸ் காடில்லா, பயாலாஜிகல் இ, ஜென்னவோ பயோபார்மா மற்றும் பனசியா பயோடெக் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், சீரம் நிறுவனத்தின் அதார் பூனவாலா ஆகியோர் கலந்து கொண்டார்.
Tags :



















