திரையரங்குகளில் வெளியிடப்பட்ட100 நாட்களுக்குப் பிறகு ஓ. டி. டி தளங்களில் வெளியிடப்பட வேண்டும்
திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து சரியாக 100 நாட்களுக்குப் பிறகு ஓ. டி. டி அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 2026 முதல் பூஜை போட்டு தொடங்கப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்த விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 நாட்களில் ஓ டி டி ரிலீஸ் போன்ற நடைமுறைகளால் திரையரங்கு வசூலில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Tags :


















