போலீசார் தாக்கியதில் இறந்த அஜித்குமாரின் உடல்அடக்கம்.

திருப்புவனம் மடப்புரத்தில் போலீசார் நகை திருட்டு வழக்கில் அஜித் என்பவரை அழைத்துச் சென்று இரண்டு நாள் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையின் போது போலீசார் அஜித்தை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இறந்த அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு நேற்று இரவு அஜித் குமாரின் உடல் திருப்புவனம் மாஜிஸ்திரேட் வேங்கட பிரசாத் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை தொடங்கி நிறைவு பெற்றது தொடர்ந்து அஜித்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைத்து பின்னர் காவல் துறையினர் பாதுகாப்புடன் மடப்புரம் எடுத்துச் சென்று அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.
Tags : போலீசார் தாக்கியதில் இறந்த அஜித்குமாரின் உடல்அடக்கம்.