தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்

by Staff / 24-02-2023 11:07:15am
தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்

வேகமாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பைக்கில் வந்த நான்கு இளைஞர்கள் காற்றில் பறந்து சாலையில் விழுந்தனர். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஹடா நகரில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் இரண்டு பைக்குகள் சேதமடைந்தன. பைக்கில் சென்ற நல்வரும் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வௌ்ளத்தில் மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via