ஈரான் வெளிவுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷ்யாவிற்கு பயணம்
ஈரானின் வெளிவுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக தனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்வதை ரத்து செய்ததை தொடர்ந்து அப்பாஸ் அரக்சி ரஷ்யா பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் திட்டமிட்டபடி இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு தனது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட் காஃப் , ஜாரெட் குஷ்னர் குழுவினரின் பயணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப், ரத்து செய்தார். அமைதி பேச்சு வார்த்தைக்கான பயணம் அதிக நேரத்தை வீணடிப்பதாலும் ஈரானிய தலைமைக்குள் குழப்பம் எழுதுவதாலும் ஈரானின் அமைதி திட்டம் போதுமானதாக இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதால் மத்திய கிழக்கு அமைதி முயற்சிகள் முடங்கியுள்ளன. இதனால் ஈரான் வெளிவுறவு அமைச்சர் ரஷ்யா ஜென் பீட்டர்ஸ் பார்க் நகருக்கு சென்று உள்ளார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து தற்போதைய போர்ச்சூழல் மற்றும் போர் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல். ரஷ்ய பயணத்தின் மூலம் ஈரான் அமெரிக்காவுடனான மோதல் போக்கை குறைக்கவும் சர்வதேச ஆதரவை திரட்டவும் மேற்கொண்டுள்ள முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
Tags :



















