நடிகர் சூரி வீட்டு திருமணத்தில் திருடுபோன நகைகள் மீட்பு
மதுரையில் நடிகர் சூரியின் சகோதரர் மகள் திருமண விழாவில் 10 பவுன் கொள்ளைபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
மணமகன் அறையில் இருந்த 5 பவுன் சங்கிலி, 3 பவுன் நெக்லஸ், 2 பவுன் பிரேஸ்லெட் என, 10 பவுன் நகைகள் திடீரென மாயமானது. இச்சம்பவம் தொடர்பாக சூரி சகோதரரின் மேலாளர் கோரிப்பாளையம் சூரியபிரகாஷ் என்பவர் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த கீரைத்துறை போலீசார், சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் இந்த விசாரணையில், பரமக்குடியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் 10 சவரன் நகைகளைத் திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தினேஷை கைதுசெய்த கீரைத்துறை போலீசார், அவரிடமிருந்து 10 சவரன் நகைகளையும் மீட்டனர்.
Tags :



















